காங்கோ ஆற்றில் படகு விபத்து - 25 பேர் பலி

December 18, 2024

காங்கோ ஆற்றில் படகு விபத்து ஏற்பட்டதில் 25 பேர் பலியாகினர். மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் மைடோபி மாகாணத்தில் பெமி ஆறு பாய்கிறது. இங்கு, இங்காங்கோ நகரிலிருந்து அண்டை நகருக்கு ஒரு படகு பயணம் செய்தது. அந்த படகில் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர். ஆனால், அதிகமான பயணிகளை ஏற்றியதால் படகு பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த பிறகு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர். மேலும் […]

காங்கோ ஆற்றில் படகு விபத்து ஏற்பட்டதில் 25 பேர் பலியாகினர்.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் மைடோபி மாகாணத்தில் பெமி ஆறு பாய்கிறது. இங்கு, இங்காங்கோ நகரிலிருந்து அண்டை நகருக்கு ஒரு படகு பயணம் செய்தது. அந்த படகில் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர். ஆனால், அதிகமான பயணிகளை ஏற்றியதால் படகு பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த பிறகு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர். மேலும் சிலர் பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை. எனவே மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu