வட மாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக 259 ரயில்கள் ரத்து

January 9, 2023

வட மாநிலங்களில் நிலவும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக 250க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வட மாநிலங்களில் கடும் குளிரும், அடர்ந்த பனி மூட்டமும் நிலவுகிறது. பல இடங்களில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால், நேற்று மட்டும் 335 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், 259 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டின் வட மாநிலங்களில் மட்டுமின்றி, மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் குளிர் வாட்டி வதைத்து […]

வட மாநிலங்களில் நிலவும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக 250க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வட மாநிலங்களில் கடும் குளிரும், அடர்ந்த பனி மூட்டமும் நிலவுகிறது. பல இடங்களில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால், நேற்று மட்டும் 335 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், 259 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வட மாநிலங்களில் மட்டுமின்றி, மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. சாலைகளில் செல்வோர் பகல் வேளைகளிலும் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் நிலையே உள்ளது. இதனால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டு, பயணியர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu