26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸிலிருந்து ரூ.63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. விமானங்களில் 22 ஒற்றை இருக்கை மற்றும் 4 இரட்டை இருக்கை வகைகள் உள்ளடக்கம். இதில் 10 விமானங்கள், வானில் எரிபொருள் நிரப்பும் வசதியுடன் உருவாக்கப்பட உள்ளன.
இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்தியா வருகையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தத்திலிருந்து 5 ஆண்டுகளுக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.இவை கடற்படைக்காக தனிப்புறமாக பயன்பாட்டிற்கு வரவுள்ளன.