கடந்த 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த கார் விற்பனை 27% உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த நிதி ஆண்டில், 39 லட்சம் கார்கள் டீலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த 2022 ஆம் நிதி ஆண்டில், 31 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செமி கண்டக்டர் தட்டுப்பாடு குறைந்து இருப்பதாலும், எஸ்யூவி ரக வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாலும், கார் விற்பனை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாருதி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள், கார் விற்பனையில் கடந்த நிதி ஆண்டில் உச்சத்தை பதிவு செய்துள்ளன. அதிலும் குறிப்பாக, மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் விற்பனை 1966164 எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 19% உயர்வாகும்.














