ஸ்டிக்கருக்கு பதிலாக பார்கோடு - டிஜிட்டல் மயமாகும் சென்ஜென் நாடுகளின் விசா

April 1, 2023

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பெரும்பான்மையான நாடுகள் சென்ஜென் கூட்டமைப்பு நாடுகளாக அறியப்படுகின்றன. எனவே, சென்ஜென் விசா எடுப்பதன் மூலம், அதன் கீழ் வரும் அனைத்து நாடுகளுக்கும் பயணிக்க முடியும். தற்போது, இந்த நாடுகளுக்கான விசா முறையை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்டிக்கருக்கு மாற்றாக 2டி பார்கோடுகள் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாக்கள் கிரிப்டோகிராஃபி முறையில் கையெழுத்து இடப்பட்டிருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பெரும்பான்மையான நாடுகள் சென்ஜென் கூட்டமைப்பு நாடுகளாக அறியப்படுகின்றன. எனவே, சென்ஜென் விசா எடுப்பதன் மூலம், அதன் கீழ் வரும் அனைத்து நாடுகளுக்கும் பயணிக்க முடியும். தற்போது, இந்த நாடுகளுக்கான விசா முறையை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்டிக்கருக்கு மாற்றாக 2டி பார்கோடுகள் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாக்கள் கிரிப்டோகிராஃபி முறையில் கையெழுத்து இடப்பட்டிருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஸ்வீடன் நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர், “இந்த நடைமுறை விசா முறைகளில், முறைகேடுகள் மற்றும் திருட்டுகளை தவிர்க்க முடியும். அதே சமயம், ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம், சென்ஜென் பகுதியில் பயண எண்ணிக்கையை குறைத்து, விசா நடைமுறைகளை எளிதாக்க முடியும்” என்று கூறியுள்ளார். மேலும், “முதல் முறை பயணிகள் மட்டுமே நேரடியாக விண்ணப்பம் பெற வேண்டி இருக்கும்; மற்றவர்களின் பயணங்கள் எளிமையாக அமையும்” என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu