'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

January 5, 2023

'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 'புரொபஷனல் கொரியர்' என்ற தனியார் கூரியர் நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினர் முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரி துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. அதனடிப்படையில் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை மண்டலத்திற்கு தொடர்புடைய நுங்கம்பாக்கம், பாரிமுனை, ஆழ்வார்பேட்டை, […]

'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

'புரொபஷனல் கொரியர்' என்ற தனியார் கூரியர் நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினர் முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரி துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. அதனடிப்படையில் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை மண்டலத்திற்கு தொடர்புடைய நுங்கம்பாக்கம், பாரிமுனை, ஆழ்வார்பேட்டை, கிண்டி, மண்ணடி, கோயம்பேடு ஆகிய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக 'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முழுமையாக முடிந்த பின்பு அதுகுறித்து தகவல்கள் வெளியாகும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu