ஹைதராபாத்தில் இருந்து அயோத்திக்கு இயங்கி வந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின்னர் பல முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கி வந்தது. அதில் ஹைதராபாத்திலிருந்து அயோத்திக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் நேரடி விமானங்களை இயக்கியது. இது வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் அயோத்தி நேரடி விமான சேவை கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டின் விற்பனை குறைந்தது இதற்கு காரணமாக கூறப்பட்டு வருகிறது. அதனால் தற்போதைக்கு அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து மட்டும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நேரடி விமானங்களை இயக்கி வருகின்றன