வெறும் 3% விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கிரீன் கார்டு - புதிய ஆய்வில் தகவல்

February 19, 2024

அண்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில், வெறும் 3% கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு கார்டு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. தி காட்கோ இன்ஸ்டிடியூட் நடத்திய புதிய ஆய்வில், அமெரிக்காவில் கிரீன் கார்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 34.7 மில்லியன் விண்ணப்பதாரர்களுக்கு கிரீன் கார்டு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பணி ஆணை வழியாக நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு 1.8 மில்லியன் பேர் விண்ணப்பித்து […]

அண்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில், வெறும் 3% கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு கார்டு கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

தி காட்கோ இன்ஸ்டிடியூட் நடத்திய புதிய ஆய்வில், அமெரிக்காவில் கிரீன் கார்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 34.7 மில்லியன் விண்ணப்பதாரர்களுக்கு கிரீன் கார்டு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பணி ஆணை வழியாக நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு 1.8 மில்லியன் பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும், அவர்களில் 8% பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு கிரீன் கார்டு விநியோகத்தில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கையால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu