அமெரிக்காவில் கார் விபத்தில் 3 இந்திய வம்சாவளி மாணவர்கள் பலி

May 22, 2024

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் 5 பேர், வேகமாக கார் ஓட்டியதால் விபத்தில் சிக்கிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. ஆரியன் ஜோஷி, அன்வி சர்மா, ஸ்ரியா அவர்சாலா ஆகிய 3 மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் 5 பேர், வேகமாக கார் ஓட்டியதால் விபத்தில் சிக்கிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. ஆரியன் ஜோஷி, அன்வி சர்மா, ஸ்ரியா அவர்சாலா ஆகிய 3 மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் விபத்து தொடர்பாக அமெரிக்க காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu