கொரோனாவுக்குப் பிறகு இமாச்சலில் பயணிகள் வருகை 3 மடங்கு அதிகரிப்பு

November 21, 2022

கொரோனாவுக்குப் பிறகு இமாச்சலில் பயணிகள் வருகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2020ம் ஆண்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. 2019ம் ஆண்டு 1.72 கோடி சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், 2020ம் ஆண்டு வெறும் 32.13 லட்சமாக குறைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்ததால், அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட நிலையில், இமாச்சலுக்கு மீண்டும் பழையபடி ஏராளமான சுற்றுலா […]

கொரோனாவுக்குப் பிறகு இமாச்சலில் பயணிகள் வருகை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2020ம் ஆண்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. 2019ம் ஆண்டு 1.72 கோடி சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், 2020ம் ஆண்டு வெறும் 32.13 லட்சமாக குறைந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்ததால், அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட நிலையில், இமாச்சலுக்கு மீண்டும் பழையபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை அங்கு 1.28 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu