தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

January 31, 2023

செய்தித் துறை இயக்குநர் உட்பட தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் கே.பி.கார்த்திகேயன் நெல்லை மாவட்ட ஆட்சியராகவும், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்-செயலர் டி.ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.பி.ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு மருந்து வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும், விருதுநகர் […]

செய்தித் துறை இயக்குநர் உட்பட தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் கே.பி.கார்த்திகேயன் நெல்லை மாவட்ட ஆட்சியராகவும், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்-செயலர் டி.ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.பி.ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு மருந்து வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்- செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூடுதல் முதன்மைச் செயலர் டி.எஸ்.ஜவஹர், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குநராகவும், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் நீரஜ் மிட்டல், நகர்ப்புற நிதி மற்றும் கட்டுமான மேலாண்மைக் கழக நிர்வாக இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu