வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப ஏற்பாடு

April 16, 2024

வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்களை தொகுதி வாரியாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களை தொகுதி வாரியாக ஒதுக்கி வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு அவற்றிற்கான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் […]

வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்களை தொகுதி வாரியாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களை தொகுதி வாரியாக ஒதுக்கி வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு அவற்றிற்கான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இதன் அடுத்தபடியாக அவற்றை ஒதுக்கீடு செய்து பிரிக்கும் பணி இன்று நடைபெறுகிறது. மேலும் தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியல், தேர்தல் விவரம் குறிப்பேடு, மெழுகுவர்த்தி, சனல் கயிறு, வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு உள்ளிட்ட 80 பொருட்களை பிரித்து வைக்கும் பணியும் இன்று தொடங்கியுள்ளது. இப்பொருள்களுடன் மின்னணு எந்திரங்கள் வருகிறத 18ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை இந்த பொருள்கள் அந்தந்த மையத்தில் உள்ள தாசில்தார் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu