மியான்மரில் சுரங்கம் இடிந்து 31 தொழிலாளர்கள் பலி

August 16, 2023

மியான்மரில் சுரங்கம் இடிந்த விபத்தில் 31 தொழிலாளர்கள் பலியாகினர். மியான்மரில் கச்சின் மாகாணத்தில் ஜேட் சுரங்கம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். மழை காலங்களில் சுரங்க பணிகள் நிறுத்தி வைக்கப்படும். ஏனெனில் விபத்து ஏற்படுவதே காரணம். இந்நிலையில் இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடுப்பாடுகளில் சிக்கி 31 பேர் பலியாகி உள்ளனர். மேலும் எட்டு பேரை காணவில்லை என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் என கூறப்படுகிறது. இவர்களை மீட்பு […]

மியான்மரில் சுரங்கம் இடிந்த விபத்தில் 31 தொழிலாளர்கள் பலியாகினர்.

மியான்மரில் கச்சின் மாகாணத்தில் ஜேட் சுரங்கம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். மழை காலங்களில் சுரங்க பணிகள் நிறுத்தி வைக்கப்படும். ஏனெனில் விபத்து ஏற்படுவதே காரணம்.

இந்நிலையில் இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடுப்பாடுகளில் சிக்கி 31 பேர் பலியாகி உள்ளனர். மேலும் எட்டு பேரை காணவில்லை என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் என கூறப்படுகிறது. இவர்களை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். மியான்மரில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu