சென்னையில் தொழில் வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
2023-2024-ம் ஆண்டில், சென்னை மாநகராட்சியில் தொழில் வரி மூலம் ரூ.532 கோடி வருமானம் கிடைத்தது. இதனையடுத்து, தொழில் வரி 35% உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வரி என்பது 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். ரூ.21 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.135-க்கு பதில் ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315-க்கு பதில் ரூ.425 என உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.690-க்கு பதில் ரூ.930 என மாற்றப்பட்டுள்ளது. ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், வரி உயர்வு இல்லை. இந்த வரி உயர்வு, மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்றது மற்றும் இந்த அரையாண்டு முதல் அமலுக்கு வருகிறது.