பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளின் காரணமாக குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு இறுதி விசாரணை இன்று நடைபெற்றதில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு ஜூன் ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலை தொடர்ந்து புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்