தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக பண்டிகை தினங்களில் சென்னையில் உள்ள பெரும்பாலான பயணிகள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு பயணிகள் அக்டோபர் 28,29,30 ஆகிய தேதிகளில் முன்னதாக சொந்த ஊர் செல்ல திட்டமிடுவார்கள். பயணிகளின் வசதிகளுக்காக 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 28ஆம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி பயணம் செய்பவர்களுக்கு இன்றும், 30ஆம் தேதி பயணம் செய்பவர்களுக்கு நாளையும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்