தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்  - அமைச்சர் சக்கரபாணி

December 15, 2022

தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறுகையில், தமிழகத்தில் மழைக்காலங்களில் நெல்மணிகள் நனையாமல் இருப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. 2 லட்சத்து 86 ஆயிரம் 350 மெட்ரிக் டன் அளவுக்கு நெல்மணிகளை பாதுகாக்க முடியும். இந்த […]

தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறுகையில், தமிழகத்தில் மழைக்காலங்களில் நெல்மணிகள் நனையாமல் இருப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. 2 லட்சத்து 86 ஆயிரம் 350 மெட்ரிக் டன் அளவுக்கு நெல்மணிகளை பாதுகாக்க முடியும். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் முடிவடையும் என்றார்.

தற்போதைய ராபி பருவத்தில் 8 லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu