தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கி ஏப்., 3 வரையும்; பிளஸ் 1 பொதுத் தேர்வு, நாளை துவங்கி ஏப்., 5 வரையும் நடைபெற உள்ளது. பிளஸ் 2 தேர்வில் 4.33 லட்சம் மாணவியர், ஒரு மூன்றாம் பாலினத்தவர் உட்பட 8.51 லட்சம் மாணவர்களும்;, 23 ஆயிரத்து, 747 தனித் தேர்வர்கள்; 5,206 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழகத்தில் 3,185 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்கென 131 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் எந்த முறைகேடும் ஏற்படாமல் கண்காணிக்க 3,100 பேர் கொண்ட பறக்கும் படைகளும்; 1,135 பேர் கொண்ட நிலையான படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.