சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைப்பு

September 13, 2022

சென்னையை உலகத் தரத்திற்கு மேம்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை மாநகர கூட்டாண்மை திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இந்தத் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்ட துணைக் குழுவின் தலைவாராக போக்குவரத்துறை ஆணையர் செயல்படுவார். சாலை பாதுகாப்பு, இந்திய […]

சென்னையை உலகத் தரத்திற்கு மேம்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை மாநகர கூட்டாண்மை திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இந்தத் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்ட துணைக் குழுவின் தலைவாராக போக்குவரத்துறை ஆணையர் செயல்படுவார். சாலை பாதுகாப்பு, இந்திய வாகனம் சாரா போக்குவரத்து திட்டம், சாலை மேம்பாடு, நடைபாதை உள்ளிட்டவைகள் தொடர்பான பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். அடுத்ததாக மல்டி மாடல் இன்டகிரேஷன் துணைக் குழுவின் தலைவராக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் செயல்படுவார். அனைத்து போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் மல்டி மாடல் இன்டகிரேஷன் திட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ளும்.

மூன்றாவது குழு நகர்ப்புற போக்குவரத்து மீள்திறன் துணைக் குழு ஆகும். இதன் தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர் செயல்படுவார். பேரிடர் காலங்களில் போக்குவரத்து தங்கு தடையின்றி இயங்குவது தொடர்பான திட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். நான்காவதாக டிஜிட்டல் சென்னை துணைக் குழுவின் தலைவராக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சிஇஓ செயல்படுவார். தரவு மேலாண்மை உள்ளட்ட டிஜிட்டல் சேவைகள் தொடர்பாக திட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu