தமிழகத்தில் 400 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்

August 4, 2023

வார இறுதி நாளை ஒட்டி 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் இளங்கோவன் செய்தி வெளியிட்டுள்ளார். வார இறுதி நாட்களில் சென்னையிலிருந்து மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வருவதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 6948 பயணிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்தாலும் […]

வார இறுதி நாளை ஒட்டி 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் இளங்கோவன் செய்தி வெளியிட்டுள்ளார்.

வார இறுதி நாட்களில் சென்னையிலிருந்து மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வருவதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 6948 பயணிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்தாலும் அவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய இடங்களில் இருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 200 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. அவை கோவை,மதுரை,திருநெல்வேலி, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் 8107 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பயனாளிகள் தங்களது பயணத்தை முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் சுதந்திர தினத்தை ஒட்டி விடுமுறை காரணமாக சுற்றுலா செல்லும் பயணிகள் அனைவரும் முன்கூட்டியே தங்களது பயணச்சீட்டினை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு ஏற்ப பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு மாதத்தில் ஒரே தடத்தில் ஐந்து முறைக்கு மேல் தொடர் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஆறாவது பயணத்திற்கு 50 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட உள்ளது. ஜூலை மாதம் 857 பயனர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu