இன்று மாலையுடன் விக்கிரவாண்டி தொகுதியில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். இதில் அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் அங்கு தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைகிறது. அதன்படி வருகிற 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது