எகிப்து - 4300 வருட பழமையான, தங்கம் முலாம் பூசப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு

January 31, 2023

எகிப்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, அண்மையில், சுமார் 4300 ஆண்டுகள் பழமையான, தங்க முலாம் பூசப்பட்ட மம்மியை கண்டுபிடித்துள்ளனர். கிசா பிரமிடுகளுக்கு அருகில் உள்ள சக்காரா நெக்ரோபோலிஸ் பகுதியில், 50 அடி ஆழத்தில், சுண்ணாம்பு கல்லால் செய்யப்பட்ட செவ்வக வடிவ சவப்பெட்டியில், தங்க முலாம் பூசப்பட்ட இந்த மம்மி கிடைத்துள்ளது. இதன் பெயர் 'ஷெகாஷெப்ஸ்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எகிப்து நாட்டை ஆண்ட மன்னனின் காவலராக இருந்த மனிதனின் மம்மியாக இருக்கும் என்று […]

எகிப்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, அண்மையில், சுமார் 4300 ஆண்டுகள் பழமையான, தங்க முலாம் பூசப்பட்ட மம்மியை கண்டுபிடித்துள்ளனர்.

கிசா பிரமிடுகளுக்கு அருகில் உள்ள சக்காரா நெக்ரோபோலிஸ் பகுதியில், 50 அடி ஆழத்தில், சுண்ணாம்பு கல்லால் செய்யப்பட்ட செவ்வக வடிவ சவப்பெட்டியில், தங்க முலாம் பூசப்பட்ட இந்த மம்மி கிடைத்துள்ளது. இதன் பெயர் 'ஷெகாஷெப்ஸ்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எகிப்து நாட்டை ஆண்ட மன்னனின் காவலராக இருந்த மனிதனின் மம்மியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், இதுவரை எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் முலாம் பூசப்பட்ட மம்மிக்களில், இதுவே பழமையானதாகவும் கருதப்படுகிறது. இந்த மம்மி கிடைத்த அறையில் பல கல் பாத்திரங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மம்மி கிடைத்த பகுதியில் உள்ள கல்லறைகளை ஆய்வு செய்வதால், எகிப்து நாட்டின் ஐந்தாம் மற்றும் ஆறாம் தலைமுறை அரசர்களைப் பற்றி அறிய முடியும் எனவும் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu