டொக்சூரி புயல் காரணமாக ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் தோன்றிய டொக்சூரி புயல் தென்கிழக்கு சீனாவை நோக்கி நகர்ந்தது. அப்போது புஜியான் மற்றும் அதனை சுற்றியுள்ள மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது. இதனால் மரங்கள் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் பத்து லட்சத்திற்கும் மேலானோர் இருட்டில் மூழ்கியுள்ளனர்.
அதோடு தலைநகர் பீஜிங் மற்றும் அதனை சுற்றியுள்ள மாகாணங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது இந்த மழையால் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதன் காரணமாக ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.














