கிழக்கு ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்துக் ௯றிய பேரிடர் மேலாண்மை துணை அமைச்சர் ஷராபுதீன் முஸ்லீம், குனார், லக்மன் மற்றும் நங்கர்ஹார் பகுதிகள் மற்றும் தலைநகர் காபூலிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வ௫வதாக ௯றினார். மேலும் யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பிற்கு அருகில் உள்ள இந்து குஷ் மலைத்தொடரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றார். 20 ஆண்டுகளுக்கு முன்பு 5.9 ரிக்டர் அளவு பதிவான மிக மோசமான பூகம்பத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அதேபோல் 2015 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இரு நாடுகளிலும் சுமார் 380 பேர் உயிரிழந்தனர் . சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் சுமார் 200 பேரைக் கொன்று, ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது. இத்தகைய பேரழிவுகள் தலிபான் அரசாங்கத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது என்று ௯றினார்.