ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் கேரள வீரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
நேற்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்கி உள்ளது. இதில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் சீனியர் தடகள பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோன்று இந்த நிதியானது வீரர்களின் பயிற்சி மற்றும் ஒலிம்பிக் தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.