பிரான்சில் இருந்து இங்கிலிஷ் கால்வாயை கடக்க முயன்ற 5 பேர் பலி

April 24, 2024

பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற ஐந்து பேர் கடலில் மூழ்கி பலியாகினர். பிரான்சில் இருந்து இங்கிலாந்து கால்வாய் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற ஐந்து பேர் கடலில் மூழ்கி பலியாகினர். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைந்து வருகின்றனர். இவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு மசோதா நிறைவேற்றி இருக்கிறது. இந்நிலையில், பிரான்சில் இருந்து கடல் வழியாக இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள் 5 […]

பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற ஐந்து பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

பிரான்சில் இருந்து இங்கிலாந்து கால்வாய் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற ஐந்து பேர் கடலில் மூழ்கி பலியாகினர். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைந்து வருகின்றனர். இவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு மசோதா நிறைவேற்றி இருக்கிறது.

இந்நிலையில், பிரான்சில் இருந்து கடல் வழியாக இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள் 5 பேர் கடலில் மூழ்கி பலியாகி உள்ளனர். இவர்கள் இங்கிலாந்து கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு குழந்தை உட்பட ஐந்து அகதிகள் நீரில் மூழ்கி பலியாகினர். இவர்களின் உடல்கள் வடக்கு பிரான்சின் விமரிக்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்தன. இதையடுத்து இவர்களது உடல்களை பிரான்ஸ் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu