துருக்கியின் தெற்கு மாகாணமான அதானாவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கோசான் மாவட்டத்தில் சுமார் 20.13 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.














