சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கின் விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு முழு அதிகாரமுள்ளது. நடப்பு கல்வியாண்டிலும் இடஒதுக்கீட்டின்படி கலந்தாய்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், இவ்வாறு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதால், அதிக மதிப்பெண் பெற்று மெரிட்டில் இடம்பெறும் மருத்துவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நடப்பு கல்வியாண்டிலும் சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வை தமிழக அரசு 15 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.