ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ஜெனிவாவில் 59 விமானங்கள் ரத்து

June 30, 2023

ஜெனீவா சர்வதேச விமான நிலையத்தில், இன்று 59 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், விமான நிலைய செயல்பாடுகள் 4 மணி நேரம் முடக்கப்பட்டது. விமான நிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இவ்வாறு நேர்ந்துள்ளது. கோடைகால பயணங்கள் அதிகமாக இருக்கும் தற்போதைய சமயத்தில், இத்தகைய நிகழ்வு ஏற்பட்டுள்ளதால், பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை விமான நிலைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட 59 விமானங்களின் புறப்பாடுகள் மற்றும் வருகைகள் […]

ஜெனீவா சர்வதேச விமான நிலையத்தில், இன்று 59 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், விமான நிலைய செயல்பாடுகள் 4 மணி நேரம் முடக்கப்பட்டது. விமான நிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இவ்வாறு நேர்ந்துள்ளது. கோடைகால பயணங்கள் அதிகமாக இருக்கும் தற்போதைய சமயத்தில், இத்தகைய நிகழ்வு ஏற்பட்டுள்ளதால், பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை விமான நிலைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட 59 விமானங்களின் புறப்பாடுகள் மற்றும் வருகைகள் ரத்து செய்யப்பட்டதாக, ஜெனீவா விமான நிலையம், ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கிட்டத்தட்ட 8,000 பயணிகள் பாதிப்படைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஜெனீவா சர்வதேச விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களுள் ஒன்றாகும். கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையில் மட்டுமே 6.8 மில்லியன் பயணிகளை இந்த விமான நிலையம் கையாண்டுள்ளது. இந்நிலையில், இன்றைய வேலை நிறுத்தம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu