இஸ்ரேலில் சிக்கி தவித்த 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தடைந்தது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராக்கெட் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இஸ்ரேல் அரசு காசா மீது வான்வெளி தாக்குதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து நடத்தி வருகிறது. மேலும் அங்கு 18,000 மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள் 18 நேபாள குடிமக்களுடன் இன்று ஐந்தாவது விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.