இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

September 24, 2022

இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்தில் கடலுக்கடியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் பொ௫ட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலர் தங்கள் வீடுகளை விட்டு உயரமான பகுதிகளுக்கு ஓடிவந்ததாகவும் அப்போது சுனாமி ஆபத்து இல்லை என்று அவர்களுக்கு செய்திகள் வந்ததாகவும் அப்பகுதியில் சிலர் தெரிவித்தனர். நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் கடலோர நகரமான மேலபோவுக்கு தென்-தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் இ௫ந்து உ௫வானதாக […]

இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்தில் கடலுக்கடியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் பொ௫ட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலர் தங்கள் வீடுகளை விட்டு உயரமான பகுதிகளுக்கு ஓடிவந்ததாகவும் அப்போது சுனாமி ஆபத்து இல்லை என்று அவர்களுக்கு செய்திகள் வந்ததாகவும் அப்பகுதியில் சிலர் தெரிவித்தனர். நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் கடலோர நகரமான மேலபோவுக்கு தென்-தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் இ௫ந்து உ௫வானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ஆச்சே கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒரு சக்திவாய்ந்த சுனாமியை உ௫வாக்கியது. இது ஒரு டஜன் நாடுகளில் சுமார் 230,000 மக்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 460 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல் ஜனவரி 2021 இல், மேற்கு சுலவேசி மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் கிட்டத்தட்ட 6,500 பேர் காயமடைந்ததாகவும் புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu