குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நடந்த 89 தொகுதிகளில் 60 சதவீத வாக்குகள் பதிவானது.
குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல்கட்டமாக தெற்கு குஜராத், கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளில் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதையொட்டி 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
நேற்று காலை 9 மணி நிலவரப்படி 4.92 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 18.95 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.