நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 70 பேர் பலியாகினர்.
நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவை மற்றும் கடுனா நகரை இணைக்கும் சாலையில், 60,000 லிட்டர் பெட்ரோல் கொண்டு சென்ற டேங்கர் லாரி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்த அப்பகுதி மக்கள், பெட்ரோலுக்காக நெருங்கினர். அப்போது லாரி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. பலரும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு தீயில் கருகினராம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, நைஜீரிய ஆளுநர் உமாரு பாகோ கூறினார். நைஜீரியாவில் ரெயில் பாதைகள் இல்லாததால், சரக்குகள் பெரும்பாலும் சாலைகளில் அழுத்தப்படுவதால், விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன.