சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, லெபனானுக்கு சென்றுள்ளனர்.
சிரிய அதிபர் ஆசாத், பாதுகாப்பு காரணமாக ரஷியாவில் தஞ்சமடைந்துள்ளதைத் தொடர்ந்து, சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, லெபனானுக்கு சென்றுள்ளனர். அங்கு வணிக விமானங்களின் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 44 ஜம்மு காஷ்மீர் ஜைரீன்கள், சைதா ஜைனாபில் சிக்கியிருந்தவர்கள். சிரியாவில் உள்ள பாதுகாப்பு நிலவரம் மற்றும் இந்தியர்களின் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்து, டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்களின் உதவியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் சில இந்தியர்கள் சிரியாவில் உள்ளனர். அவர்களுக்கு உதவிக்கான தொடர்பு எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.














