தொடர் மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக முழுவதும் தென்மேற்கு பருவ மழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணா ராஜா சாகர் அணையின் நீர்மட்டம் மற்றும் கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ண சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2507 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்திற்கு இன்று காலை முதல் வினாடிக்கு 7507 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் இனிவரும் நாட்களில் காவிரியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அப்படி கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயரும் வாய்ப்புள்ளது.