பாகிஸ்தானில் சிறையில் இருந்த 80 இந்திய மீனவர்களை நேற்று பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மற்றும் வெளிநாட்டினரை வெளியேற்றும் செயல்களில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் கராச்சி மாலிர் சிறையில் இந்திய மீனவர்கள் 80 பேர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அரசு நேற்று கைதி செய்யப்பட்டிருந்த 80 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அல்லாமல் இக்பால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் லாகூர் சென்று அங்கிருந்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.