பாராளுமன்ற தேர்தல் ஒட்டி தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் டிஜிபிகள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், உள்துறை செயலாளர்கள் மற்றும் முக்கிய அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் தேர்தல் பணிகளைப் பற்றியும் தேர்வு முன்னேற்பாடுகள் பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் வேட்பாளர்கள் சுவிதா செயலி மூலம் தங்களுக்கு தேவையான பல்வேறு அனுமதிகளை பெற்றுக் கொள்ளலாம். ரோடு நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை தேர்தல் நடத்தை அதிகாரியிடம் பெற வேண்டும். இதில் பிரதமருக்கு மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக சில விதிவிலக்குகள் உள்ளது. மேலும் தேர்தலுக்கான பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 13.08 லட்சம் பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 8050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை தொகுதியில் 511 வாக்குச்சாவடிகளும், தென் சென்னையில் 456 வாக்கசாவடிகளும், தேனியில் 381 வாக்கு சாவடிகள், திருவள்ளூர் தொகுதி 170, வட சென்னை 254, மத்திய சென்னை 179, ஸ்ரீபெரும்புதூர் 337, காஞ்சிபுரம் 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.