டெண்டர் அடிப்படையில் 850 மதுபான பார்களுக்கு அனுமதி வழங்க ஏற்பாடு

December 12, 2023

பார்கள் இல்லாத 850 கடைகளுக்கு டெண்டர் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 900 மதுபான கடைகளில் 850 மதுபான கடைகளின் உரிமம் முடிந்துவிட்டது. அதன் பிறகு இவற்றிற்கான பார் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் பல கடைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. இதனால் பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் […]

பார்கள் இல்லாத 850 கடைகளுக்கு டெண்டர் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 900 மதுபான கடைகளில் 850 மதுபான கடைகளின் உரிமம் முடிந்துவிட்டது. அதன் பிறகு இவற்றிற்கான பார் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் பல கடைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. இதனால் பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் முடிவு செய்தது. இதனை அடுத்து இதற்கான டெண்டர் இன்று திறக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பார்கள் நடத்த தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றி நாளை ஆணை வெளியிடப்படும். பின்னர் உரிமம் பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் மதுபான கழகத்தில் அனுமதி பெற்றதும் பார் நடத்த அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நடைமுறைகள் அனைத்தும் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர்களிலும் சேர்த்து 1200 மதுபான கடைகள் உள்ளன. மீதமுள்ள 350 கடைகளுக்கும் இந்த மாதத்துடன் உரிமம் முடிவடையுள்ளது. அதன் பிறகு அந்த பார்களுக்காக டெண்டர் விடப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu