சூடானில் துணை ராணுவ படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
சூடானில் பலகாலமாக ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே அதிகார போட்டி நிலவு வருகிறது. இதன் காரணமாக உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது தாக்குதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசி, பட்டினியால் வாடும் சூழ்நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணத்தில் எல்பேசர் என்ற இடத்தில் துணை ராணுவ படையினர் திடீரென்று வான்வழி தாக்குதல் நடத்தினர். அப்பொழுது அவர்கள் சரமாரியாக குண்டுகளை வீசினார்கள். இந்த தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் பலியாகினர். 11 பேர் படுகாயம் அடைத்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.














