பாகிஸ்தான் - விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

November 6, 2023

பாகிஸ்தானில் உள்ள மியான்வாலி விமானப்படைத்தளத்தில், நேற்று முன்தினம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில், 3 விமானங்கள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலை நடத்திய 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெஹ்ரிக்-இ-தாலிபான் என்ற தீவிரவாத அமைப்பு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. நல்வாய்ப்பாக, இந்த தாக்குதலில் பயன்பாட்டில் இல்லாத விமானங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்களை தீவிரமாக தேடி வந்த பாகிஸ்தான் […]

பாகிஸ்தானில் உள்ள மியான்வாலி விமானப்படைத்தளத்தில், நேற்று முன்தினம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில், 3 விமானங்கள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலை நடத்திய 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தெஹ்ரிக்-இ-தாலிபான் என்ற தீவிரவாத அமைப்பு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. நல்வாய்ப்பாக, இந்த தாக்குதலில் பயன்பாட்டில் இல்லாத விமானங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்களை தீவிரமாக தேடி வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அவர்களில் 9 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் அன்வர் உல் காக்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu