தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 900 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானது. இந்நிலையில் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 900 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அறிக்கையின் படி மத்திய அரசு மேலும் நிதி வழங்குவதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் வழங்குவதில் மாநிலங்களில் எந்தவித பாகுபாடும் இன்றி மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.