ஹிமாச்சல் முதல்வராக சுக்விந்தர் பதவியேற்பு

December 12, 2022

ஹிமாச்சலின் 15வது முதல்வராக காங்கிரசின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்றார். சிம்லாவின் ரிட்ஜ் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், மூத்த தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, துணை முதல்வராக பதவியேற்றார். இந்த […]

ஹிமாச்சலின் 15வது முதல்வராக காங்கிரசின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார்.

ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்றார். சிம்லாவின் ரிட்ஜ் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், மூத்த தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்த பதவியேற்பு விழாவில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் உட்பட அமைச்சரவையில் 12 பேர் இடம்பெற முடியும். தற்போதைய நிலையில், சுக்விந்தர் சிங் சுகு, முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுள்ளனர். இதையடுத்து, மீதமுள்ள 10 அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu