செமி கண்டக்டர் உற்பத்திக்காக, 30 ஜப்பான் நிறுவனங்களுடன் வேதாந்தா குழுமம் ஒப்பந்தம்

December 13, 2022

வேதாந்தா குழுமம், 30 ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. செமி கண்டக்டர் உற்பத்தி, கிளாஸ் டிஸ்ப்ளே உற்பத்தி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை மாற்ற, இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக வேதாந்தா குழுமம் கூறியுள்ளது. கடந்த வாரம் டோக்கியோவில் நடைபெற்ற, 2022 ம் ஆண்டுக்கான வேதாந்தா - அவன்ஸ்ட்ரேட் பிசினஸ் பார்ட்னர்ஸ் மாநாட்டில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் 100 சர்வதேச நிறுவனங்களின் 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். […]

வேதாந்தா குழுமம், 30 ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. செமி கண்டக்டர் உற்பத்தி, கிளாஸ் டிஸ்ப்ளே உற்பத்தி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை மாற்ற, இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக வேதாந்தா குழுமம் கூறியுள்ளது.

கடந்த வாரம் டோக்கியோவில் நடைபெற்ற, 2022 ம் ஆண்டுக்கான வேதாந்தா - அவன்ஸ்ட்ரேட் பிசினஸ் பார்ட்னர்ஸ் மாநாட்டில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் 100 சர்வதேச நிறுவனங்களின் 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்தங்கள் குறித்து, வேதாந்தா குழுமத்தின் செமி கண்டக்டர் வர்த்தகப் பிரிவின் சர்வதேச நிர்வாக அதிகாரி ஆகாஷ் கே ஹெர்பார் அறிவிப்புகளை வெளியிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu