சீன பொருட்களை வாங்க 60 சதவீத இந்தியர்கள் மறுப்பு

December 17, 2022

சீன பொருட்களை வாங்க 60 சதவீத இந்தியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அருணாசலபிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா- சீனா இடையேயான எல்லை மோதலுக்கு பிறகு சீனாவில் தயாராகும் பொருட்களை இந்தியாவில் வாங்குவது தொடர்பாக லோக்கல் சர்க்கிளில் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 10-ல் 6 இந்தியர்கள் […]

சீன பொருட்களை வாங்க 60 சதவீத இந்தியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அருணாசலபிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா- சீனா இடையேயான எல்லை மோதலுக்கு பிறகு சீனாவில் தயாராகும் பொருட்களை இந்தியாவில் வாங்குவது தொடர்பாக லோக்கல் சர்க்கிளில் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 10-ல் 6 இந்தியர்கள் சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது.

60 சதவீத இந்தியர்கள் சீன பொருட்களை வாங்க மறுத்துவிட்டனர். சீன பொருட்களுக்கு பதிலாக 11 சதவீதம் பேர் தரமான இந்திய பொருட்களையும், 8 சதவீதம் பேர் மற்ற வெளிநாட்டு பொருட்களையும் வாங்குவதாக தெரிவித்துள்ளனர். குறைந்த விலை, தரம், நுகர்வோர் சேவை உள்ளிட்ட காரணங்களை கொண்டு மற்ற நாட்டு பொருட்களை இந்தியர்கள் வாங்குவது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் சீன பொருட்கள் கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைப்பதில்லை என்று கூறி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu