2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

December 31, 2022

2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு குறிக்கிறது. இந்நிலையில், சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் நிகோசியா நகரில் நடந்த தொழில் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து […]

2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு குறிக்கிறது. இந்நிலையில், சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் நிகோசியா நகரில் நடந்த தொழில் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மூலம் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டிற்கான வலுவான இலக்குகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியது. 2025க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதுமே எங்களது இலக்கு என தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu