பணமதிப்பிழப்புக்கு பின், இந்தியாவின் பணப்புழக்கம் 83% உயர்ந்துள்ளது - உச்சநீதிமன்றம்

January 2, 2023

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மீதான வழக்கின் தீர்ப்பு என்று உச்ச நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், இந்தியாவில் பணப்புழக்கம் 83% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 8, 2016 ஆம் ஆண்டு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. கருப்பு பண நடமாட்டத்தை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பில், பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி தரவுகளின் படி, நவம்பர் 4, […]

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மீதான வழக்கின் தீர்ப்பு என்று உச்ச நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், இந்தியாவில் பணப்புழக்கம் 83% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 8, 2016 ஆம் ஆண்டு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. கருப்பு பண நடமாட்டத்தை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பில், பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி தரவுகளின் படி, நவம்பர் 4, 2016ல், 17.74 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம், ஜனவரி 6, 2017 50% குறைந்து, 9 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில், அதாவது, டிசம்பர் 23 2022 ல் பணப்புழக்கம் 32.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த மார்ச் 31 2022 இல் 31.33 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம், தொடர்ந்து வந்த மாதங்களில் உயர்ந்து 32.42 லட்சம் ஆக உள்ளது. எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu