''கோவோவாக்ஸ்' தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் ஆக செலுத்த இன்னும் 10 - 15 நாட்களில் அனுமதி கிடைக்கும் என சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
சீரம் இந்தியா நிறுவனம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசியை தயாரித்து வினியாகித்து வருகிறது. இந்த நிறுவனம்'கோவோவாக்ஸ்' என்ற தடுப்பூசியையும் தயாரித்துள்ளது. இது குறித்து சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறுகையில், மிகப் பெரிய மக்கள் தொகை உடைய நம் நாடு கொரோனா காலத்தில் மக்கள் நலனை திறம்பட கையாண்டது. மேலும் 80 நாடுகளுக்கு உதவி புரிந்ததும் உலக நாடுகளை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'கோவோவாக்ஸ்' தடுப்பூசியை 'பூஸ்டர் டோஸ்' ஆக பயன்படுத்த இன்னும் 10 -15 நாட்களில் அனுமதி கிடைக்கும். 'ஒமைக்ரான்' வகை தொற்றின் மீது 'கோவிஷீல்டு' தடுப்பூசியை விட இது அதிக திறனுடன் செயலாற்றும் என்று அவர் கூறினார்.