பன்றி காய்ச்சல் காரணமாக கேரளாவில் 532 பன்றிகள் அழிப்பு

January 13, 2023

பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் காரணமாக கேரளாவில் 532 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரள சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினர் இணைந்து அந்த பகுதியில் சோதனை நடத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோழி மற்றும் வாத்துக்களை அழித்தனர். இந்நிலையில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் புளூ எனப்படும் பன்றி காய்ச்சல் பரவியது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் உள்ள பண்ணைகளில் ஆய்வு செய்தனர். இதில் ஒரு […]

பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் காரணமாக கேரளாவில் 532 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரள சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினர் இணைந்து அந்த பகுதியில் சோதனை நடத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோழி மற்றும் வாத்துக்களை அழித்தனர். இந்நிலையில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் புளூ எனப்படும் பன்றி காய்ச்சல் பரவியது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் உள்ள பண்ணைகளில் ஆய்வு செய்தனர். இதில் ஒரு பண்ணையில் இருந்த 70 பன்றிகள் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்தது.

இதையடுத்து நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பன்றிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பண்ணைகளில் தற்போது 532 பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்று அழிக்கும் பணி தொடங்கியது. மேலும் இந்த பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu