45 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் ராக்கெட் திட்டம் - நாசா அறிவிப்பு

January 24, 2023

45 நாட்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும் திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. அணு ஆற்றல் உந்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறும் நாசா, தனது 2023 ஆம் ஆண்டுக்கான முக்கிய திட்டங்களில் ஒன்றாக இதனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாசாவில் பணியாற்றும் பேராசிரியர் ரியான் கோசே இந்த திட்டத்தை பற்றி நாசாவின் வலைப்பக்கத்தில் விவரித்து கூறியுள்ளார். அணு ஆற்றல் உந்துதல் தொழில்நுட்பத்தின் மூலம், கெமிக்கல் ராக்கெட்களின் உந்துதல் […]

45 நாட்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும் திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. அணு ஆற்றல் உந்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறும் நாசா, தனது 2023 ஆம் ஆண்டுக்கான முக்கிய திட்டங்களில் ஒன்றாக இதனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாசாவில் பணியாற்றும் பேராசிரியர் ரியான் கோசே இந்த திட்டத்தை பற்றி நாசாவின் வலைப்பக்கத்தில் விவரித்து கூறியுள்ளார். அணு ஆற்றல் உந்துதல் தொழில்நுட்பத்தின் மூலம், கெமிக்கல் ராக்கெட்களின் உந்துதல் விசை இரு மடங்காக உயர்த்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், ஜெனான் மற்றும் கிரிப்டான் வேதிப்பொருட்களை அதிக வேகத்தில் இயக்கி, விண்கலத்தை அதிவேகத்தில் முன்னிட்டு செல்ல உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரேடார் கண்காணிப்பில் 60 ஆண்டுகளாக உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu