டெக் மஹிந்திரா லாபம் 5% சரிவு

January 31, 2023

டெக் மஹிந்திரா நிறுவனம், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், வருடாந்திர அடிப்படையில் 5.3% சரிந்து, 1297 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய், வருடாந்திர அடிப்படையில் 20% உயர்ந்து, 13735 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதாந்திர அடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபம் 1% மற்றும் வருவாய் 5% அளவில் உயர்வை பதிவு செய்துள்ளன. கடந்த காலாண்டில், டெக் மஹிந்திரா வென்றுள்ள […]

டெக் மஹிந்திரா நிறுவனம், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், வருடாந்திர அடிப்படையில் 5.3% சரிந்து, 1297 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய், வருடாந்திர அடிப்படையில் 20% உயர்ந்து, 13735 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதாந்திர அடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபம் 1% மற்றும் வருவாய் 5% அளவில் உயர்வை பதிவு செய்துள்ளன.

கடந்த காலாண்டில், டெக் மஹிந்திரா வென்றுள்ள ஒப்பந்தங்களின் மதிப்பு 795 டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய காலாண்டுகளை விட அதிகமாகும். மேலும், நிறுவனத்தின் EBIT மதிப்பு 60 புள்ளிகள் அதிகரித்து 12% ஆக பதிவாகியுள்ளது. மேலும், EBITDA மதிப்பு, வருடாந்திர அடிப்படையில், 4% உயர்ந்து 2144 கோடியாக பதிவாகியுள்ளது. நிறுவனம் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில், டெக் மஹிந்திராவின் ஒட்டுமொத்த விற்பனையில், 49.7% அமெரிக்க விற்பனை மூலம் கிடைத்துள்ளது. ஐரோப்பா 24.4% மற்றும் உலகின் இதரப் பகுதிகளில் 25.9% விற்பனை பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu